
சென்னையில் மேலும் 100 சிற்றுந்துகள் இயக்கப்டும் என இயக்கப்படும் என சட்டப் பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் விஜய பாஸ்கர், சென்னையில் மேலும் 100 சிற்றுந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.
சென்னையில் பெரிய பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பெரிய பேருந்துகள் செல்ல முடியாத சின்ன,சின்ன தெருக்களில் போக்கு வரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சிற்றுந்து வேவையை சென்னையில் தொடங்கி வைத்தார்.
சென்னையில் அனைத்து புறநகர் பகுதிகளையும் இணைக்கும் வகையில் ஏற்கனவே, 200 சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிற்றுந்து வசதியை பல இடங்களுக்கும் நீட்டிக்கும் வகையில் மேலும் 100 சிற்றுந்துகள் இயக்கப்படவுள்ளதாக சட்டப் பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் இன்று தெரிவித்தார்.
சென்னை தவிர தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், சிற்றுந்து சேவையை விரிவு படுத்தப்படும் என்றும் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.