
திருவள்ளூரில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டி குற்றங்களைத் தடுக்க 35 இரு சக்கர ரோந்து வாகனங்களை காவல்துறையினருக்கு வழங்கினார் மாவட்ட எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி.
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய ஐந்து காவல் உள்கோட்டங்களுக்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்கவும் 35 இருசக்கர ரோந்து வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி கூறியது:
“சட்டம், ஒழுங்கு குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தடுத்து கட்டுக்குள் கொண்டுவரவும் இருசக்கர வாகனங்களில் நவீன ஒளிரும் விளக்கு பொருத்தப்பட்டும், இரவு நேரங்களில் சைரன் ஒலியுடன் கூடிய இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் காவலாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். தங்களது பணியை சீறும் சிறப்புமாக செய்ய வேண்டும்” என்று கூறினார்.