மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியனின் 31வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு பிறந்த நாள் பரிசாக அண்ணன் விஜய் பிரபாகரன் சொகுசு காரை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி காலமானார். இவரது உடல் மக்கள் வெள்ளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தினந்தோறும் அவரது சமாதிக்கு ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனின் 31வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
இதையும் படிங்க: வாரிசு அரசியலில்கூட பெண்களை புறக்கணிப்பதுதான் திராவிட மாடல்! ஆனால் பிரதமர் மோடி! போட்டு தாக்கும் வானதி!
இந்நிலையில், விருதுநகர் வேட்பாளராக தேமுதிக சார்பில் விஜய் பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிர ஈடுபட்டு வருகிறார். அப்படி இருந்த போதிலும் தனது தம்பி சண்முக பாண்டியன் பிறந்தநாள் பரிசாக அவரது அண்ணன் விஜய் பிரபாகரன் காஸ்ட்லியான போர்ஷ் (Porsche) என்ற சொகுசு கார் ஒன்றைப் பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றும் திமுக! பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை பார்ப்பது சரியல்ல! அண்ணாமலை!
இந்த காரின் விலை ரூ. 1.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது நடிப்பில் உருவாகி வரும் படை தலைவன் படத்தின் டீசர் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியானது.