
உலக அளவில் தற்போது மக்களை திரும்பி பார்க்க வாய்த்த ஒரு படம் என்றால் அது மெர்சல் என்று சொல்லலாம்
மெர்சல் படம் தீபாவளியன்று வெளியானதையொட்டி ரசிகர்கள் வைத்த கட் அவுட்டிற்கு அளவே இருக்காது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.பல தடைகளை மீறி ப்ரீ ப்ரோமோஷன் மூலமாக ஒரு வாரம் திரையில் ஓடி, தற்போது இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது
இதனையும் கொண்டாட பேண்டும் என்பதற்காக, விஜய் ரசிகர் ஒருவர் மெர்சல் படத்திற்கு கட் அவுட் வைத்துவிட்டுத் வீடு திரும்பியபோது, பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவர் திருவனந்தபுரம் விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
விஜய் மீது கொண்டுள்ள அதிக பற்று காரணமாக முதன்முதலில் நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட ரசிகர் இவர்.இவருடைய செல்ல பெயர் லவ் டுடே ஸ்ரீநாத். நண்பர்கள் முதல் உறவினர்கள் வரை இப்படிதான் இவரை செல்லமாக அழைப்பார்களாம்.
கட்அவுட் வைத்துவிட்டு திரும்பிய போது விபத்தில் பலியான ரசிகர் ஸ்ரீநாத் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
.