
மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ரஜினிகாந்த நடித்து வெளிவரவுள்ள 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை(27.10.17)நாளை துபாயில் நடைபெற உள்ளது
இதற்காக நடிகர் ரஜினிகாந்த்,இயக்குநர் சங்கர், நடிகை எமிசாக்சன், யே.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் துபாய் சென்றடைந்தனர்
இதற்கு முன்னதாக 2.௦ பட நட்சத்திரங்கள் துபாயில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
சந்திப்புக்கு முன்னதாக சங்கர், நடிகர் ரஜினிகாந்த் , நடிகை எமிசாக்சன் உள்ளிட்டோர் சோபாவில் சும்மா ஹாயாக அமர்ந்த வண்ணம் பேசி மகிந்தனர்...
செய்தியாளர் சந்திப்பின் போது, நடிகர் ரஜினி படத்தை பற்றி பேசியதோடு மட்டுமல்லாமல் யாருக்கோ நறுக்குன்னு பதில் தெரிவிக்கும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார்
அதாவது “தாம் நிஜ வாழ்வில் நடிப்பதில்லை”என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துபாயில் 2.0 படத்தின் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த வார்த்தை அரசியல் உள்நோக்கத்துடன் பேசப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது