
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி தவெக தலைவர் விஜய் இன்று சந்தித்தார். சுமார் 2,000 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் உரையாற்றிய விஜய் திமுகவை கடுமையாக தாக்கினார். திமுக மக்களிடம் வாக்கு வாங்கி விட்டு மக்களை ஏமாற்றியதாக விஜய் குற்றம்சாட்டினார். தவெகவுக்கு என்ன கொள்கை உள்ளது? என்று கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
பாலாற்றில் மணல் கொள்ளை
தொடந்து உயிர் நாடி பாலாற்றில் அடித்த திமுக கொள்ளை ரூ 4730 கோடி என்று விஜய் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக பேசிய அவர், ''பாலாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளை நடக்கிறது. மணல் கொள்ளையால் ரூ.4730 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இதை நான் சும்மா வாய்க்கு வந்தபடி சொல்லவில்லை. கையில் ஆதாரத்தை வைத்துக் கொண்டு சொல்கிறேன். 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காஞ்சிபுரம் பேருந்து நிலையம் இன்னும் மாற்றப்படவில்லை'' என்று தெரிவித்தார்.