தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை!

Published : Nov 01, 2018, 04:40 PM IST
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை!

சுருக்கம்

தமிழகத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த  8 மணி நேர அதிரடி சோதனையில் லட்சக்கணக்கில் பணமும் பரிசுப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

 

அதேபோல் செங்கல்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் டிரைவிங் லைசென்ஸ் வழங்க லஞ்சம் கேட்பதாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடைபெற்றது. சேலம் மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த புரோக்கர்கள் பணத்தை தரையில் வீசிவிட்டு சென்றனர். அதேபோல் புதுக்கோட்டை, சூலூர் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழித்துறையினர் ஊழியர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, திருவண்ணாமலை கோவை, விழுப்புரம், தென்காசி, மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!