மானிய கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு... பொதுமக்களை வஞ்சிக்கும் மத்திய அரசு!

Published : Nov 01, 2018, 03:47 PM IST
மானிய கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு... பொதுமக்களை வஞ்சிக்கும் மத்திய அரசு!

சுருக்கம்

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து வீட்டு உபயோகித்திற்கான மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து வீட்டு உபயோகித்திற்கான மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். 

சமையல் கேஸ் விலை மாதந்தோறும் விலை மாற்றியமைக்கப்படுகிறது. மானிய இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஏற்கனவே ரூ.896 ஆக இருந்தது. இந்நிலையில் சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.958.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது சிலிண்டருக்கு ரூ.62.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மானியத்துடன் கூடிய சமையல் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.491-ல் இருந்து ரூ.499.39 ஆக அதிகரித்துள்ளது. அதாவது சிலிண்டருக்கு ரூ.3.39 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டருக்கு இன்று முதல் முன்பதிவு செய்வோர் ரூ.958.50 செலுத்தி சிலிண்டரை பெற வேண்டும்.

மேலும் அவர்களின் வங்கி கணக்கில் ரூ.464.11 மானியம் தொகை செலுத்தப்படும். பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!