திடீரென நிர்மலா தேவி வாக்குமூலம் வெளியானது ஏன்? எதற்கு? எப்படி? பரபரப்பு தகவல்!

By vinoth kumarFirst Published Nov 1, 2018, 10:02 AM IST
Highlights

நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு ஏழு மாதங்களுக்கு பிறகு போலீசாரிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் வரி மாறாமல் வெளியானதன் பின்னணியில் வி.வி.ஐ.பி ஒருவர் இருக்கும் தகவல் கசிந்துள்ளது.

நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு ஏழு மாதங்களுக்கு பிறகு போலீசாரிடம் அவர் கொடுத்த வாக்குமூலம் வரி மாறாமல் வெளியானதன் பின்னணியில் வி.வி.ஐ.பி ஒருவர் இருக்கும் தகவல் கசிந்துள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரி மாணவிகளுக்கு ஆசை வார்த்தை கூறி தவறான பாதைக்கு அழைத்ததாக நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு விருந்தாக்கவே மாணவிகளை தவறான பாதைக்கு நிர்மலா தேவி அழைப்பது போன்ற ஆடியோவும் வெளியாகி வைரல் ஆனது. ஆனால் திடீர் திருப்பமாக இந்த வழக்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெயரும் அடிபட்டது.

 

  இதற்கிடைய செய்தியாளர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்த பன்வாரிலால் புரோஹித் தனக்கு நிர்மலா தேவி என்றால் யார் என்றே தெரியாது என்று பேட்டி அளித்தார். மேலும் நிர்மலா தேவியை தான் ஒரு போதும் சந்தித்தது இல்லை என்றும் விளக்கம் அளித்தார். ஆனால் அதன் பிறகும் கூட நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்பு படுத்தி ஒரு புலனாய்வு வார இதழ் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தது.

நிர்மலா தேவியின் வாக்குமூலம் என்று கூட சில கட்டுரைகளை அந்த புலனாய்வு வார இதழ் வெளியிட்டது. அந்த கட்டுரைகளில் எல்லாம் ஆளுநர் பெயரும் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் தான் அந்த புலானய்வு இதழின் ஆசிரியர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் நிர்மலா தேவிக்கும் ஆளுநருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது காவல் நிலையத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலமாக தெரியவரும் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது. இப்படியாக அறிக்கை வெளியாகி ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் தான் நிர்மலா தேவியின் வாக்குமூலம் என்று பிரபல நாளிதழ் மற்றும் மாலை நாளிதழில் சுடச் சுட செய்தி வெளியானது.

நிர்மலா தேவி வாக்குமூலம்  வேறு எந்த புலனாய்வு இதழுக்கும் கிடைக்காத நிலையில் செய்தியை எப்போதும் செய்தியாக கொடுக்கும் அந்த நாளிதழில் இந்த வாக்குமூலம் வெளியானது செய்தித்துறையில் உள்ள பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இது குறித்து விசாரித்த போது தான் இந்த விவகாரத்தில் அடிபடும் வி.வி.ஐ.பி ஒருவருக்கும் நிர்மலா தேவிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை வெளிப்படுத்தவே வாக்குமூலம் வெளியிடப்பட்டது தெரியவந்தது. 

அந்த வி.வி.ஐ.பி மட்டும் அல்லாமல் அந்த வி.வி.ஐ.பி இருக்கும் பதவியில் யார் இருந்தாலும் குறிப்பிட்ட அந்த நாளிதழ் நட்புறவு பாராட்டுவது வழக்கம். அந்த நட்பின் வெளிப்பாடாகவே வி.வி.ஐ.பிக்கா வாக்குமூலத்தை அந்த நாளிதழ் வெளியிட்டதாக சொல்கிறார்கள். வாக்குமூலம் முழுக்க முழுக்க உண்மை என்பதை உறுதிப்படுத்துக் கொண்டு அதற்கான ஆவணங்களை எல்லாம் வாங்கிக் கொண்டு தான் செய்தி வெளியிடப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

click me!