
கடலூரில் விஷ வாயு தாக்கி 3 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நாளை அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக சார் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடலூர் முதுநகர் சாலையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். பாதாள சாக்கடைக்குள் இறங்கி அவர்கள் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியது.
இதில் துப்புரவு பணியாளர்கள் 3 பேர் விஷ வாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த எஸ்.பி விஜயகுமார் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் விஷ வாயு தாக்கி 3 துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நாளை அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக சார் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.