சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது வெற்றி உடல்.. பொதுமக்கள் அஞ்சலிக்கு ஏற்பாடு- எப்போது அடக்கம்.? வெளியான தகவல்

By Ajmal Khan  |  First Published Feb 13, 2024, 9:09 AM IST

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி உடல் சட்லஜ் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள நிலையில் , இன்று மாலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் மாலை 6 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.


விபத்தில் சிக்கிய வெற்றி துரைசாமி

அதிமுக மூத்த நிர்வாகியும், சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி, இவர் இயக்குனராக உள்ளார். தனது படத்தின் லொக்கேஷன் தேர்வுக்காக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர் கோபிநாத்துடன்  இமாச்சலப் பிரதேசத்துக்கு கடந்த மாதம் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்ட பின்னர் சென்னை திரும்புவதற்காக கடந்த 4-ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.5) சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி, சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் உயிரிழந்தார். காயத்தோடு கோபிநாத் மீட்கப்பட்டார்.

Tap to resize

Latest Videos

undefined

வெற்றியின் உடலை தேடிய மீட்பு படையினர்

இதனையடுத்து வெற்றி துரைசாமியை தேடும் பணி தொடங்கியது. 100க்குமேற்பட்ட மீட்பு படையினர் தேடும் பணியை தொடங்கினர். ஆனால் வெற்றி துரைசாமி உடமைகள் மட்டும் மீட்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் மூளை பகுதி கிடந்தது. இது வெற்றி துரைசாமியுடையதாக இருக்கலாம் என்ற கோணத்தில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே 8 நாட்கள் தேடுதல் பணியில் நேற்று காலை வெற்றியின் உடல் மீட்கப்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் வெற்றியின் உடலை ஸ்கூபா டிரைவ் வீரர்கள் கண்டறிந்தனர். மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் உடற்கூராய்வுக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவடைந்து வெற்றியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில் இது தொடர்பாக மனித நேய அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்தியில், சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த 4ஆம் தேதி சட்லஜ் ஆற்றுப்பகுதியில் விபத்தில் சிக்கியதாகவும், 8 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல் மாலை 5 மணிக்கு சிஐடி காலனியில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர் மாலை 6 மணிக்கு தியாகராய நகர் பகுதியில் உள்ள கண்ணம்மாபேட்டை மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

Vetri Duraisamy சைதை துரைசாமி மகன் வெற்றியின் உடல் மீட்பு!

click me!