
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் தங்கியிருந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானல் வட்டகானல் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சிலரை தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் வட்டகானல் பகுதியில் ஒரு காட்டேஜில் தங்கி இருந்து சதித் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவுப்படி, 10 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் வட்டகானல் பகுதியில் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே போலீஸார் அனுமதிக்கின்றனர்.
Attachments area