மகனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை தீக்குளிப்பு

By Dinesh TGFirst Published Oct 11, 2022, 4:59 PM IST
Highlights

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்த முருகன் தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர்  தன் மகனுக்கு ஜாதி சான்றிதழ் வாங்க கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என பல தரப்பட்ட அரசு அலுவலகங்களில் முயற்சித்துள்ளார். கடைசி வரை அவருடைய மகனுக்கு ஜாதி சான்றிதழ் வாங்க இயலவில்லை. 

ஆர் எஸ் எஸ் காரர் போல் பேசும் தமிழக ஆளுநர்..! திராவிடம் குறித்த பேச்சுக்கு திமுக பதிலடி

ஜாதி சான்றிதழ் வாங்க முடியாத காரணத்தினால்  மனம் வெறுத்துபோய் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்ட மையம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.. மாஸ் காட்டிய தமிழக அரசு

தீ வைத்துக் கொண்டதில் அவருடைய ஆடைகள் முழுவதுமாக எரிந்து எரிந்து உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தொடர்ந்து வேல்முருகன் 60 சதவீத தீக்காயங்களுடன் மீட்க்கப்பட்டு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!