A C Shanmugam : வேலூர் கோட்டையை பிடிப்பாரா ஏசி சண்முகம்.? முன்னிலை, வாக்கு நிலவரம் என்ன.? லேட்டஸ்ட் அப்டேட்

By Ajmal KhanFirst Published Jun 4, 2024, 9:17 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் பின்னடைவை சந்தித்துள்ளார். 

வாக்கு எண்ணிக்கை தீவிரம்

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இணைந்து வேலூர் தொகுதியில் புதிய நீதிக்கட்டசி தலைவர் ஏசி சண்முகம் களத்தில் மீண்டும் இறங்கியுள்ளார். வேலூர் மக்களவைத் தொகுதி வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியது.  வேலூர் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,28,273 ஆகும். அதில், 11,23,715 பேர் வாக்கு செலுத்தினர். 

Latest Videos

ஏசி சண்முகம் வெற்றி வாய்ப்பு என்ன.?

வேலூர் மக்களவைத் தொகுதியில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கதிர் ஆனந்த் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 2ஆம் இடத்தை பெற்றார். தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், பசுபதி அதிமுக சார்பிலும், ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக் கட்சி) பாஜக சார்பிலும் களம் கண்டுள்ளனர்.

வேட்பாளர்கள்

திமுக-                       கதிர் ஆனந்த்- 1,46,578 வாக்குகள்
புதியநீதிக் கட்சி-  ஏ.சி.சண்முகம்- 97,031 வாக்குகள்
அதிமுக-                  பசுபதி - 30,620 வாக்குகள்
நாம் தமிழர்-           மகேஷ் ஆனந்த் - 7,409 வாக்குகள்


 

click me!