Annamalai : கோவை தொகுதியில் தாமரை மலருமா.? 55ஆயிரம் வாக்குகள் அண்ணாமலை பின்னடைவு- பாஜக ஷாக்

By Ajmal KhanFirst Published Jun 4, 2024, 8:23 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 2 மாத காலமாக நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அந்த வகையில் கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது. 

கோவை தேர்தல் வரலாறு என்ன.?

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் விறு விறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், இன்று இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டின் 20வது மக்களவைத் தொகுதியாக உள்ள கோவையில், பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

Latest Videos

2019 மக்களவை தேர்தல் ) 2019 ஆம் ஆண்டு தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 8 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சிபிஎம் வேட்பாளர் பி. ஆர். நடராஜன், பாஜக வேட்பாளரான, ராதாகிருஷ்ணனை 1,79,143 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

Lok Sabha Elections: மோடியின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்குமா இண்டியா கூட்டணி? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை!

அண்ணாமலை வாகை சூடுவாரா.?

தற்போது 2024ஆம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை களம் இறங்கியுள்ளார். இதன் காரணமாக தமிழகம் இந்த தொகுதியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் திமுக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.

வேட்பாளர்கள்

திமுக-  கணபதி ராஜ்குமார்- 2,51,284 வாக்குகள்

பாஜக- அண்ணாமலை- 1,94,654 வாக்குகள்

அதிமுக- சிங்கை ராமச்சந்திரன்- 97,515 வாக்குகள்


 

Thiruma: சிதம்பரம் தொகுதியில் மீண்டும் வாகை சூடுவாரா திருமாவளவன்.?முன்னிலை நிலவரம் என்ன.?லேட்டஸ்ட் அப்டேட் இதோ
 

 

click me!