கொடூரமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டால் சரிந்து விழுந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குகள்! ஃபினான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தி....

First Published May 25, 2018, 12:41 PM IST
Highlights
Vedanta shares tumble after protesters killed


தென்கிழக்கு தமிழகத்தின் தொழில் மையங்களில் ஒன்றாகவும், மீன் உற்பத்தி மற்றும் துறைமுக நகரமாகவும் திகழும் தூத்துக்குடியில் போலீஸாரால் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டால் 13 கொல்லப்பட்டனர்; ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த படுகொலைகள் விவகாரம் செய்திகளில் பரவியதால் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.  

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால், புற்றுநோய் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களின் தாக்கம் ஏற்படுவதாலும் ஸ்டெர்லைட்க்கு எதிராகப் போராடிவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 13க்கும் பேர் போலீசாரால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ஸ்டெர்லைட்டின் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் நேற்று முன்தினம் முதல் (மே 23ஆம் தேதியன்று) சரிவைச் சந்தித்துள்ளன. இந்த நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வாலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்நிறுவனம் எண்ணெய், காப்பர் முதல் அலுமினியம் வரையிலான தொழில்களில் ஈடுபட்டுள்ளது.

தூத்துக்குடி படுகொலை செய்திகள் உலகமெங்கும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரவியதால் , வேதாந்தாவின் முதலீட்டாளர்களின் போக்கு மாறியுள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் மே 23ஆம் தேதியன்று 11.5 விழுக்காடு சரிவடைந்துள்ளது. 

அதுமட்டுமல்ல, கடந்த மூண்டு மாதங்களாக காப்பர் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். தூத்துக்குடி படுகொலைகள் குறித்து தமிழகத்தில் கொந்தளிப்பு நொடிக்கு நொடி வலுப்பதால், ஸ்டெர்லைட் இரண்டாவது யூனிட் விரிவாக்கம் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்ற (மதுரை கிளை) இடைக்காலத் தடை விதித்துள்ளது. தற்போது தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இணையச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் போராட்டத்தின் எதிரொலியாக, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு முடிவு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி இதை அறிவித்தார். ஆலையை மூடுவதற்கு முன்னதாக மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி படுகொலை விவகாரம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவையும் தாண்டி வெளிநாட்டிலும் பேசப்படும் இந்தப் போராட்டம், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பத்திரிகையான தி கார்டியன்  பத்திரிகையிலும் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகளும் முக்கிய செய்தியாக வெளிவந்துள்ளது.

மேலும், வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் சரிந்தது தொடர்பான செய்தி இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபினான்சியல் டைம்ஸ் ஊடகத்திலும் வெளிவந்துள்ளது.

click me!