இன்னும் மூணே மாசம்தான்…அதற்குள் இபிஎஸ் அரசு கவிழ்ந்து விடும்…ஆரூடம் சொன்ன திருமா..

 
Published : May 14, 2017, 07:47 AM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
இன்னும் மூணே மாசம்தான்…அதற்குள் இபிஎஸ் அரசு கவிழ்ந்து விடும்…ஆரூடம் சொன்ன திருமா..

சுருக்கம்

VCK president thiruma speech

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமியின் அரசு இன்னும் 3 மாசத்திலே கவிழ்ந்துவிடும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக  உடைந்த அதிமுக தற்போது ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.

இந்த இரு அணிகளும் இணைவது குறித்து இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அணித் தலைவர்கள் முரண்பாடாக பேசி வருவதால் இணைப்பு முயற்சி தோல்வியடைந்தது.

அதே நேரத்தில் உடைந்த இரு அணிகளையும் மத்திய பாஜக அரசு இயக்கி வருவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பாஜக வின் பினாமி அரசாக எடப்பாடி பழனிசாமியின் அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த அரசை பாஜக இயக்கி வருவதாக தெரிவித்த திருமாவளவன், பாஜக இன்றி ஒரு அணுவும் அசையாது என்ற நிலையே தமிழகத்தில் நிலவி வருவதாக தெரிவித்தார்,

எண்ணி இன்னும் மூன்றே  மாதங்களில் எடப்பாடி பழனிசாமி அரசு கவிழ்ந்துவிடும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

 

 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!