
அரியலூர்
அரியலூரில் பல்வேறு இடங்களில் அம்பேத்கர் சிலைக்கும், அம்பேத்கரின் படத்திற்கும் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அரசியல் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி தமிழகத்தின் ஏராளமான இடங்களில் நேற்று அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிகப்பட்டது.
அதன்படி. அரியலூர் மாவட்டம், திருமானூர் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழகொளத்தூர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு இலநந்தனர் தலைமை வகித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றியச் செயலாளர்கள் எசனை கண்ணன், சுள்ளங்குடி கண்ணன் தலைமையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தே.மு.தி.க. சார்பில் ஒன்றிய மாணவரணி செயலாளர் கார்த்திக் தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ரவிசங்கர் தலைமையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோன்று, செயங்கொண்டத்தில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு பா.ம.க. சார்பில் அரியலூர் மாவட்டச் செயலாளர் கண்ணன் தலைமையில் வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் கொளஞ்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரியலூரில் உள்ள பல்வேறு கிராமங்களில் மக்கள் தங்களது ஊர்களில் அம்பேத்கரின் புகைப்படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இதில், சிறியவர் முதல் பெரியவர் வரை என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.