அண்ணா அறிவாலத்திற்கு வந்த வானதி சீனிவாசன்.! கனிமொழியோடு திடீர் சந்திப்பு- காரணம் என்ன.?

Published : Apr 30, 2025, 03:45 PM IST
அண்ணா அறிவாலத்திற்கு வந்த வானதி சீனிவாசன்.! கனிமொழியோடு திடீர் சந்திப்பு- காரணம் என்ன.?

சுருக்கம்

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் திமுக எம்பி கனிமொழியும், பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசனும் சந்தித்து உரையாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கனிமொழி- வானதி சீனிவாசன் சந்திப்பு

தமிழகத்தில் திமுக-பாஜக இடையே கடுமையாக போட்டி ஏற்பட்டு வரும் நிலையில், பாஜக மூத்த தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அண்ணா அறிவாலத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு திமுக எம்பி கனிமொழியிடம் பேசியிருப்பது பரபரபாகியுள்ளது.

அந்த வகையில் மயிலாப்பூர் திமுக எம்ல்ஏ மயிலை வேலு இல்ல திருமண நிகழ்வு இன்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனை திமுக எம்பி கனிமொழியை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் உடல் நலம் விசாரித்துக்கொண்டர். 

வைரலான புகைப்படம்

இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,   மயிலாப்பூர் பகுதியின் செயலாளராக, மயிலாப்பூர் தொகுதி கட்சியின் வளர்ச்சிக்காக இரண்டாக பிரிக்கப்பட்ட போது கிழக்கு பகுதியின் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றி படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு மாவட்டச் செயலாளர் என்கின்ற பொறுப்பை ஏற்றிருக்கிறார் மயிலை வேலு,  என்று சொன்னால் ஏதோ, ஊர்ந்து வந்து ஏறவில்லை. தவழ்ந்து வந்து ஏறவில்லை, படிப்படியாகதான் ஏறியிருக்கிறார். ஊர்ந்து தவழ்ந்து என்று சொல்கின்றபொழுது ஏன் கரவொலி எழுப்பினீர்கள் என்று எனக்கும் புரிகிறது. உங்களுக்கும் புரிகிறது.

ஊர்ந்துகொண்டிருந்த தமிழ்நாடு

ஒன்றும் இல்லை... நடைபெற்று முடிந்திருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நான் நிறைவாக காவல் துறை மானியக் கோரிக்கையில் பதிலளித்துப் பேசும்பொழுது தமிழ்நாட்டைப் பற்றி சொல்லும்போது, தமிழ்நாடு ஏற்கெனவே எப்படி இருந்தது. இப்போது எப்படி மாறியிருக்கிறது, வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதைப் பற்றி குறிப்பிட்டு சொல்வதற்காக ஒரு உதாரணத்தை சொன்னேன். ஊர்ந்துகொண்டிருந்த தமிழ்நாடு, இன்றைக்கு கம்பீரமாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் நின்று கொண்டிருக்கிறது என்று சொன்னேன்.

அதற்கு, எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் உதயகுமார் அவர்கள் நான் பேசி முடித்தபோது, அதோடு விட்டிருந்தால் பிரச்சினையே வந்திருக்காது. நான் பேசியது அப்படியே போய் இருக்கும். வெளியிலும் வந்திருக்காது. பிரபலமாக இந்த செய்தியும் வந்திருக்காது. தானாக வந்து மாட்டிக்கொண்டார்கள். நான் பேசி முடித்ததற்குப் பிறகு எழுந்து சபாநாயகரைப் பார்த்து முதலமைச்சர் சிறப்பாக பேசினார். தெளிவாகப் பேசினார். அழகாகப் பேசினார். ஆனால், இடையில் "ஊர்ந்து வந்து" என்பதை மட்டும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சொன்னார். நான் உடனே கேட்டேன். ஊர்ந்து என்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால், தவழ்ந்து என்று போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். 

தவழ்ந்து வந்து முதலமைச்சராகியுள்ளேன்

குழந்தைகள் தவழ்ந்து வருவது தவறா? என்று சொன்னேன். ஏற்கனவே, எஸ்டிபிஐ மாநாட்டில் இதே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அவரின் புகழைப் பற்றி பேசுகின்றபோது, அவர் எப்படியெல்லாம் முதலமைச்சர் பதவிக்கு வந்தார் என்பதற்கு அவரே பேசியிருக்கிறார். நான் தவழ்ந்து, தவழ்ந்து, தவழ்ந்து படிப்படியாக வந்து முதலமைச்சராக வந்திருக்கிறேன் என்று அவரே பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது. நான் நேற்றுதான் பார்த்தேன். முன்பே பார்த்து இருந்தால் சட்டமன்றத்தில் சொல்லியிருப்பேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்