எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் கோவையில் மெட்ரோ ரயில் - வானதி சீனிவாசன் உறுதி

Published : Nov 21, 2025, 12:57 PM IST
Vanathi srinivasan

சுருக்கம்

Vanathi Srinivasan: எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனதும் கோவைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்று கோவை வந்த பிரதமர் இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு விழிப்புணர்வு செய்தியை கூறி இருக்கிறார் பிரதமருக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார்.

தற்போது திமுகவும் கூட்டணி கட்சிகளும் மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துவிட்டது என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்றும் திமுக எப்பொழுதும் அரைகுறையாகவும் பொய் செய்திகளையும் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பார்கள் என்றார். பிரதமருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யை கூறுவதாகவும் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்றாலும் கூட குறிப்பிட்ட சதவிகிதம் தேவை என்றும் அப்படி இருக்கும்பொழுது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு குறிப்பிட்ட மக்கள் தொகை இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

மக்கள் தொகை, மெட்ரோ பயன்பாடுகள் குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கத்தை மத்திய அரசிடம் கொடுத்திருக்க வேண்டும் மத்திய அரசு வரையறை என்பது தனிப்பட்ட மாநிலங்களுக்கு அல்ல என்றும் அது பொதுவான பாலிசி எனவும் அதனை ஒழுங்காக படிக்காமல் புரிந்து கொள்ளாமல் வேண்டுமென்றே இந்த அறிக்கையை கொடுத்துள்ளார்கள் என தெரிவித்தார். மேலும் சென்னை மெட்ரோ பயன்பாடு பிப்ரவரி கணக்கின்படி நான்கு லட்சம் பயணிகள் தான் என்று தெரிவித்தார். பாஜக அரசுக்கு கெட்ட பெயரை கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களது குறிக்கோள் என்றும் கூறினார்.

கோவை மெட்ரோ திட்டம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிக் பஜார், நஞ்சப்பாசாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகள் எல்லாம் நெரிசலான பகுதிகள் என்றும் இந்த பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் இங்குள்ள கடைகளை இடிக்க வேண்டும் கடைகளை இடித்து தள்ளும் அளவிற்கு திட்டங்களை போட்டு மத்திய அரசிடம் கொடுத்துள்ளார்கள் என கூறினார்.

கோவை மக்கள் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட திமுகவை வெற்றி பெற செய்யாததால் கோவை மக்களை வஞ்சிப்பதற்காகவே செயல்படுத்த முடியாத திட்ட அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசிடம் கொடுத்துள்ளது என்றும் கூறினார். அதே சமயம் பிற மாநிலங்களுக்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர் பாட்னா போபால் எல்லாம் சுற்றுலாவை மையப்படுத்தியும் போபால் கேப்பிட்டல் சிட்டி என்பதால் அதனை மையப்படுத்தியும் அனுமதி கேட்டு உள்ளார்கள் என்றும் மேலும் அந்த நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை எல்லாம் சேர்த்து திட்ட அறிக்கை கொடுத்து அனுமதி பெற்றுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு கேட்டுள்ள விளக்கங்களை எல்லாம் எந்த ஒரு ஹோம் ஒர்க்கும் செய்யாமல் கோவை மக்களை வஞ்சிக்கும் செயலாகவே செயல்படுத்த முடியாத அறிக்கையை தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ளதாக விமர்சித்தார்.

2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரான பிறகு கோவைக்கு மெட்ரோவை கொண்டு வருவோம் எனவும் தெரிவித்தார். 10க்கு 10 கொடுத்த கோவை மக்களுக்கு மிகச் சரியாக திட்டமிட்டு மெட்ரோ ரயில் திட்டத்தை திட்ட வரையறைகளுக்கு உட்பட்டு அதனை மாற்றியமைத்து பெற்று வருவோம் எனக்கோவை மக்களுக்கு உறுதி அளிப்பதாக தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் குளங்கள், 16 மெடிக்கல் காலேஜ்க்கு ஒரு வருடத்தில் அனுமதி, டிபன்ஸ் இன்னோவேசன் ஹப், ரயில்வே திட்டங்கள், கோவையில் இரு ரயில் நிலைய மேம்பாடுகள், ஏழை மக்களுக்கு வீடு, விவசாயிகளுக்கு நிதி உதவி, திருச்சி மாவட்ட நியூ டெர்மினல், போன்ற அனைத்தையும் மோடி தான் தந்துள்ளதாக தெரிவித்தார்.

நேற்று கோவைக்கு பிரதமர் வந்துள்ள பொழுது ஒரு Protocol அடிப்படையிலாவது முதல்வர் வந்து பிரதமரை பார்த்திருக்க வேண்டும். தேர்தல் வருவதால் இந்த மெட்ரோ ரயில் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார்.

வால்பாறை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர் பள்ளிக்கல்வித்துறையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று கூட்டம் போடுகிறார்கள் என்றும் அதில் நடிகர் நடிகைகளை அழைத்து வந்து பேச வைக்கிறார்கள் என்று தெரிவித்த அவர் ஆனால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை ஆசிரியர்கள் குறைபாடு போன்ற பல்வேறு விஷயங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் கொள்ளை வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதனை அரசை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என தெரிவித்தார். மேலும் முதல்வர் டெல்டா காரர் என்று கூறி டெல்டா மக்களை ஏமாற்றுகிறார் என்றும் கோவைக்கு சாலை போடுவதற்கு 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி இருப்பதாக ஒவ்வொரு முறையும் கூறுகிறார்கள் நானும் நான்கு வருடங்களாக சட்டமன்றத்தில் அந்த 200 கோடி ரூபாய் எங்கே என்று கேட்டு வருகிறேன் என தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TVK MLA Case: டிசம்பர் 22.. தேதி குறிச்சாச்சு.. தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்
Thiruparankundram Deepam controversy: திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை: வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் கோயிலில் மகாதீபம்!