நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி... டிவிட்டரில் ட்ரெண்டாகும் #Vanakkam_Modi!!

Published : Apr 07, 2023, 11:58 PM ISTUpdated : Apr 08, 2023, 12:00 AM IST
நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி... டிவிட்டரில் ட்ரெண்டாகும் #Vanakkam_Modi!!

சுருக்கம்

பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி டிவிட்டரில் வழக்கத்திற்கு மாறாக #Vanakkam_Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி டிவிட்டரில் வழக்கத்திற்கு மாறாக #Vanakkam_Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்காக நாளை தமிழகம் வருகிறார். சென்னை விமான நிலையம் வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை முழுவதும் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 22,000 போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்... அறிவித்தது பெருநகர போக்குவரத்து காவல்துறை!!

அதிமுக ஆட்சியின் போது பிரதமர் தமிழகம் வரும் போது அவரது வருகைக்கு எதிராக அப்போதைய எதிர்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கறுப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் டிவிட்டரில் #GoBackModi என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகும். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் பிரதமர் தமிழகம் வந்த போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக அவரை மரியாதையுடன் வரவேற்றது.

இதையும் படிங்க: மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்… ஆளுநர் குறித்து நடிகர் சத்யராஜ் கருத்து!!

இவை அனைத்தும் இதுவரை நடந்தவை. ஆனால் தற்போது புதிதாக ஒன்று நடந்துள்ளது. அதாவது பிரதமர் வருகையின் போது வழக்கமாக #GoBackModi என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வந்த நிலையில் தற்போது #Vanakkam_Modi  என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ட்ரெண்டிங் ஹேஷ்டேக்கில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!