Seeman: 1.15 மணி நேரம்! 53 கேள்விகள்! போலீஸ் விசாரணையில் நடந்தது என்ன? சீமான் பேட்டி!

Published : Mar 01, 2025, 01:13 AM IST
Seeman: 1.15 மணி நேரம்! 53 கேள்விகள்! போலீஸ் விசாரணையில் நடந்தது என்ன? சீமான் பேட்டி!

சுருக்கம்

நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமானிடம் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து முடிந்துள்ளது. இது குறித்து சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

நடிகை விஜயலட்சுமி வழக்கில் சீமானிடம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் போலீசார் 1.15 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அவரிடம் மொத்தம் 53 கேள்விகளை காவல்துறையினர் கேட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்பு புகாரை வாபஸ் பெற்ற அவர் மீண்டும் போலீசில் புகார் கொடுத்திருந்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சீமான் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். அதே வேளையில் போலீஸ் வழக்கை ரத்து செய்யக்கூடாது என தெரிவித்து இருந்தது. ஆனால் சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் அவர் குறித்த வழக்கை 12 மாத காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்பேரில் சீமான் நேற்று முன்தினம் ஆஜாராக போலீஸ் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர் நேற்று நேற்று முன்தினம் நேரில் ஆஜராகவில்லை. நாளை (அதாவது நேற்று) ஆஜராக வேண்டும் என போலீசார் கெடு விதித்து இருந்தனர். அதன்படி சீமான் நேற்று இரவு வளசரவாக்கம் போலீசில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து வளசராக்கம் ஆய்வாளர் மற்றும் இணை ஆணையர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Seeman - Vijayalakshmi Case: வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார் சீமான்! சென்னையில் பரபரப்பு!

சீமானிடம் சுமார் 63 கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது, இரவு 10 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 11.15 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்து செயதியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், ''கருணாநிதி என்னை சிறையில் அடைத்து தலைவராக்கினார். முதல்வர் ஸ்டாலின் என்னை சிறையில் அடைத்து நான் முதல்வராக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறது'' என்றார்.

தொடர்ந்து காவல்துறை விசாரணை குறித்து பேசிய அவர், ''கடந்த முறை விசாரணையின்போது கேட்கப்பட்ட பழைய கேள்விகளையே கேட்டனர். அனைத்துக்கும் பதில் கொடுத்துள்ளேன். மீண்டும் தேவைப்பட்டால் விசாரணைக்கு அழைப்போன் என்றனர். நானும் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் என சொல்லி இருக்கிறேன்'' என்றார்.

இந்த வழக்கில் திமுக அரசுக்கு தொடர்பு இருக்கிறதா? என நிரூபர்கள் கேட்டப்போது, ''திமுக அர்சின் அழுத்தத்தின்படியே காவல்துறை செயல்படுகிறது. உயர்நீதிமன்றம் 3 மாதங்கள் விசாரணை முடிக்க அவகாசம் கொடுத்த நிலையில், 3 நாளில் சம்மன் அனுப்பியது ஏன்? என்னை சமாளிக்க முடியாததால் அரசு என்னை இப்படி அசீங்கப்படுத்த நினைக்கிறது'' என்று தெரிவித்தார்.

மேலும் நடிகையின் குற்றசாட்டு குறித்து பேசிய சீமான், ''என் மீதான நடிகையின் குற்றச்சாட்டு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. நடிகை 15 ஆண்டுகளாக என்னையும், என் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி வருகிறார். நடிகை உடன் திருமணம் என்ற நிலைக்கே வரவில்லை. அவர் வைத்திருந்தது காதல் அல்ல; கண்றாவி. விரும்பு உறவு வைத்துக் கொண்டிருந்த அவர் பின்னர் பிரிந்து போய் விட்டார். விரும்பி உறவு வைத்துக் கொண்டவர் அவர். இது எப்படி பாலியல் குற்றமாகும்?'' என்று கூறினார்.

காவல் நிலையத்தில் சீமான்! போலீஸ்-நாதகவினர் தள்ளுமுள்ளு! கதறி அழுத வீரப்பன் மகள்!

PREV
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!