எங்களுடன் துணையாக நில்லுங்கள்! தமிழ்நாடு பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

Published : Feb 28, 2025, 11:06 PM ISTUpdated : Mar 01, 2025, 01:29 AM IST
எங்களுடன் துணையாக நில்லுங்கள்! தமிழ்நாடு பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சுருக்கம்

தனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களுக்காக தங்களுடன் துணையாக நிற்கும்படி தமிழ்நாடு பாஜகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்தியை திணிக்கும் பாஜக அரசை கண்டித்துள்ளார். தமிழக மக்களின் நலனுக்காக தங்களுடன் நிற்கும்படி தமிழ்நாடு பாஜகவுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்தாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிறந்தநாள் விழா நடந்தது. சுகாராதரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஏற்பாடு செய்த இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், திமுக கூட்டணியில் உள்ள வைகோ, திருமாவளவன், முத்தரசன், செல்வபெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ''இது பிறந்தாள் விழா இல்லை. இது 2026ம் ஆண்டு தேர்தலுக்கான திமுக கூட்டணியின் வெற்றி விழா ஆகும். திமுக கூட்டணியில் விரிசல் வராதா? என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனர். திமுக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு வருமே தவிர, எங்கள் கூட்டணியில் ஒருபோதும் விரிசல் வராது. திமுக கூட்டணி தமிழ்நாட்டின் சமூகநீதியை, கல்வியை, சுகாரத்தை நிலைநாட்டியுள்ளது. கொடிய சக்திகளிடம் இருந்து எங்கள் கூட்டணியில் விரிசல் வரும் என நினைப்பவர்களின் எண்ணத்தில் மண்தான் விழும்'' என்றார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ''மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு தமிழ்நாட்டை தொடந்து வஞ்சித்து வருகிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி தருவோம் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். பெயர் மட்டும்தான் தர்மேந்திர பிரதான். ஆனால் அவரிடம் தர்மம் இல்லை. மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். நாங்கள் தேவைப்பாட்டால் இந்தி என்ன? என்ன எந்த மொழியையையும் நாங்கள் கற்றுக் கொள்வோம்'' என்றார்.

மேலும் பேசிய மு.க.ஸ்டாலின், ''எங்களை என்ன மிரட்டினாலும் உங்களால் இந்தியை திணிக்க முடியாது. மிரட்டினால் அடங்கிப் போவதற்கு நாங்கள் அதிமுக அல்ல; திமுக. மத்திய அரசு இப்போது என்ன நினைக்கிறார்கள்? இப்படி அறிவுப்பூர்வமாக முற்போக்குச் சிந்தனையுடன் பேசுகிறார்களே, இங்கு மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் முழங்குகிறார்களே, இவர்களை எவ்வாறு தடுக்கலாம் என்று பார்த்தார்கள். அதற்குத்தான், இப்போது தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வரப்போகிறார்கள். நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கையை நம்முடைய பிரதிநிதித்துவத்தைக் குறைக்க நினைக்கிறார்கள். அதனால்தான் முன்கூட்டியே இந்தப் பிரச்சினையை நாம் இப்போது கையில் எடுத்து இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து இதுகுறித்து பேசிய ஸ்டாலின். ''ஏற்கெனவே, பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தபோது, என்ன சொன்னார்? எதிர்காலத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகமாகப் போகிறது என்று பேசினார். மத்திய உள்துறை அமைச்சர் என்ன சொன்னார்? மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவந்தபோது, 2024 தேர்தலுக்குப் பிறகு தொகுதி மறுவரையறை இருக்கும் என்று சொன்னார். நாம் இப்போது கேள்வியெழுப்பிய பின்னர், இப்போது என்ன சொல்கிறார்கள்? பொத்தாம் பொதுவாக, தமிழகத்துக்குத் தொகுதிகள் குறையாது என்று சொல்கிறார்கள். மற்ற மாநிலங்களுக்கு அதிகரிப்பார்களா? தெரியாது.

Seeman: 1.15 மணி நேரம்! 53 கேள்விகள்! போலீஸ் விசாரணையில் நடந்தது என்ன? சீமான் பேட்டி!

நாங்கள் கேட்கும் கேள்வி, நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? “மற்ற மாநிலங்களுக்கு மக்கள்தொகை அடிப்படையில் அதிகரிக்காது” என்று ஏன் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்? முன்னாள் பிரதமர்கள் நேருவும், வாஜ்பாயும் உறுதி கொடுத்தது போன்று, பிரதமர் மோடி ஏன் உறுதி கொடுக்க மாட்டேன் என்கிறார்?

எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக உறுதி கொடுங்கள். “இப்போது இருக்கும் மக்கள் தொகை அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாது. 1971 மக்கள்தொகை அடிப்படையில், தமிழகத்துக்குரிய பிரிதிநிதித்துவம் கிடைக்கும். தமிழகத்துக்குப் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று உறுதி கொடுங்கள். இன்றைக்குத் தமிழகம் எழுப்பியிருக்கும் இந்த உரிமைக்குரலை, தெலங்கானா, கர்நாடகா எதிரொலித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி. மற்ற மாநிலங்களும் நியாயத்துக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.

மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். அதில் கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பிரதான எதிர்க்கட்சி அதிமுக கலந்து கொள்ளும் என்ற செய்தி வந்திருக்கிறது. மகிழ்ச்சி. சிலர், கலந்து கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்வதெல்லாம், இன்றைக்கு பாஜகவை மகிழ்விக்க நீங்கள் செய்யும் சுயநல அரசியலால் தமிழகத்துக்குத் தீங்குதான் ஏற்படும். பாஜகவை நம்பி சென்றவர்கள், அவர்களின் தேவை தீர்ந்தவுடனே மற்ற மாநிலங்களில் என்ன ஆனார்கள் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.

அதுமட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கும் பாஜகவினருக்கும் சேர்த்து நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, இந்த விவகாரத்தில் தமிழகத்துக்குத் துணையாக நில்லுங்கள். தயவு செய்து உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதீர்கள். நாம் அனைவரும் ஓரணியில் இருக்கிறோம் என்று மற்ற மாநிலங்களுக்குக் காட்ட வேண்டும். அதுமூலமாகத்தான் வர இருக்கும் ஆபத்த தடுத்து, நம்முடைய உரிமையை வென்றெடுக்க முடியும். வென்றெடுத்தால்தான், எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாம் இதைச் செய்தே ஆக வேண்டும். இதில் தவறிவிட்டோம் என்றால், நமக்கான அடையாளமே இல்லாமல் போய்விடும்'' என்று தெரிவித்தார்.

சிறுமி பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தி பேசிய மயிலாடுதுறை ஆட்சியர்! பொங்கியெழுந்த அண்ணாமலை!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!