
தென்மாவட்டத்தில் திமுவை இரும்புக் கோட்டையாக மாற்றியவர் பெரியசாமி என மறைந்த பெரியசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை N.பெரியசாமி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதை அறிந்ததும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;
என்.பெரியசாமியின் மறைவு எனக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது. தென்மாவட்டத்தில் திமுவை இரும்புக் கோட்டையாக மாற்றியவர். பெரியசாமியின் மறைவு திமுகவிற்கு பேரிழப்பு. திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த என்.பெரியசாமி, மக்களின் செல்வாக்கை பெற்றவர். நான் 30 ஆண்டுகால நட்பை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார்.
மேலும், அவரை இழந்து வாடும் பிள்ளைகள், குடும்பத்தினர், திமுக நிர்வாகிகளுக்கு மதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.