பட்டாசு வெடிக்க தடை..மீறினால் அபராதம்.! அரசு எடுத்த அதிரடி முடிவு

By Raghupati RFirst Published Jul 6, 2022, 7:02 PM IST
Highlights

நாளுக்கு நாள் தமிழகத்தின் நகர்ப்புற பகுதிகளில் காற்று மாசுபாடு, டெல்லியை போலவே அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை மாசுபாடு அதிகரிப்பதால் அவ்வப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதுண்டு. வாகனங்கள், தொழிற்சாலைகள் விடும் புகைகளால் காற்று மாசுபாடு அதிகரித்து விடுகிறது.நாளுக்கு நாள் தமிழகத்தின் நகர்ப்புற பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு.. "லேடி வழியில் போக சொன்னா.. மோடி வழியில் போறாங்க" அதிமுகவை டாராக கிழித்த கி.வீரமணி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் என் குப்பை – என் பெருமை எனும் திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதியில் உள்ள திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள், மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நகர் மன்ற தலைவர் சகுந்தலா தலைமையில் ஆணையாளர் முத்து முன்னிலையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் முகூர்த்த நாளில் சீர்வரிசை கொண்டு வரும் போது சாலையில் பேப்பர் வெடி வெடிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. நகராட்சியின் உத்தரவை மீறி பேப்பர் வெடி வெடித்தால் 5000ரூ முதல் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு.. இடைக்கால பொதுச்செயலாளர் கனவில் எடப்பாடி.. மண்ணை அள்ளிப்போட்ட கேசிபி.. அச்சச்சோ !

மேலும் அரசியல் கட்சி சம்பந்த கூட்டம், தலைவர்களை வரவேற்பது போன்றவைகளுக்கும் பேப்பர் வெடி வெடிக்க கூடாது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலம் அனைத்து திருமண மண்டபங்களுக்கு நோட்டிஸ் ஒட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. "தமிழகத்தில் இருந்து ஷிண்டே புறப்படுவார் !" அண்ணாமலை கிளப்பிய புது சர்ச்சை

click me!