
சாதியை இங்கு யாரு பார்க்கிற என்று பேசிக்கொள்கிற இந்நாளில்தான் கோவிலுக்குள் ஒரு தலித் பெண்ணை நுழைய விடாமல் தடுக்கும் அவலமும் இங்கு நடக்கிறது.
புதுச்சேரி அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீ மிதி விழா நடைபெற்றது. இதனால் சாமியை தரிசனம் செய்ய ராதா(27) என்ற பெண் வந்தார்.
கோவிலில் இருந்த ஆண், பெண்கள் ராதாவை தடுத்து நிறுத்தி வெளியே செல்லுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த ராதா, கோவிலுக்குள் சென்று சாமியை தரிசனம் செய்வேன் என்றார். ஒரு கட்டத்தில் சுதாவை மிரட்டி, அங்கிருந்து வெளியேற்றி விட்டனர். அரசு பணியாளர்களான நாராயணசாமி, சரவணன் என்பவர்கள் கடுமையாக அந்தப் பெண்ணை பேசும் வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து கோவில் நிர்வாகம் இது எங்களுக்குள் நடக்கும் பிரச்சனை நாங்களே தீர்த்துக்கொள்வோம் இதை பெரிது பண்ணவேண்டாம் எனக் கூறியுள்ளனர்.