மே 4 ஜனாதிபதி தமிழகம் வருகை அடுத்த கேஷ்டேக்க்கு ஆள் ரெடி

Asianet News Tamil  
Published : May 01, 2018, 03:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:18 AM IST
மே 4 ஜனாதிபதி தமிழகம் வருகை அடுத்த கேஷ்டேக்க்கு ஆள் ரெடி

சுருக்கம்

ramnath kovindh tamil nadu visit

மே 4ல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.

சென்னைக்கு 4-ம் தேதி வரும் ஜனாதிபதி ஹெலிகாப்டரில் வேலூர் செல்கிறார். வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரி நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார். மாலையில் ஸ்ரீநாராயணி மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 4 மணிக்கு வேலூர் தங்க கோயில் சென்று ராம்நாத் கோவிந்த் வழிபடுகிறார். பின் வேலூரில் இருந்து புறப்பட்டு மாலை 8 மணிக்கு சென்னை வருகிறார்.

5ம் தேதி காலை சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்கிறார். 5 ம் தேதி பிற்பகல் குருநானக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

காவேரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படாத நிலையில் இதற்கு முன் வந்த பிரதமர் மோடியை தமிழகம் வரவேற்ற விதம் உலகமே அறிந்தது . இந்நிலையில் ஜனாதிபதியின் வருகை மிக முக்கியமாக கருதப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!
டெலிவரி ஊழியருக்கு சரமாரி வெட்டு.. சென்னையில் போதை கும்பல் வெறியாட்டம்.. ஷாக் வீடியோ!