
மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டியில் கல்குவாரியில் பாறைகள் சரிந்து மூன்று தொழிலாளர்கள் உயிரிழுந்துள்ளனர்.
பூச்சம்பட்டி கல்குவாரியில் வேலை பார்க்கும் மக்கள் அதிகம். இன்று எதிர்பாராத விதமாக பாறைகள் சரிந்ததில் தொழிலாளர் மூவர் உயிரிழந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கல்குவாரிக்கு எதிராகவும் இறந்தவர்களுக்கு இழப்பீடு கேட்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ்காரகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொழிலாளர் தினத்தில் மூன்று தொழிலாளர்களின் மரணம் மக்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.