அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இனி தடையில்லா மின்சாரம்.! மின்வாரியம் அதிரடி உத்தரவு..!

By vinoth kumar  |  First Published Apr 28, 2023, 11:27 AM IST

அமைச்சர்கள் மற்றும் விவிஐபிக்கள் வருகை தரக்கூடிய இடங்களில் பராமரிப்புக்காக மின்தடை செய்யக்கூடாது என்றும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இதனை யாரும் சரியாக பின்பற்றுவதில்லை. 


அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில்  தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அமைச்சர்கள் மற்றும் விவிஐபிக்கள் வருகை தரக்கூடிய இடங்களில் பராமரிப்புக்காக மின்தடை செய்யக்கூடாது என்றும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இதனை யாரும் சரியாக பின்பற்றுவதில்லை. இதனை சுட்டிக்காட்டி அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

Tap to resize

Latest Videos

 * அமைச்சர்கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் அவசர காலங்களைத் தவிர்த்து பராமரிப்பு பணி என்று மின்தடை செய்யக்கூடாது. 

* நிகழ்ச்சி முடியும் வரை உதவி பொறியாளர் நிலைக்கு குறையாத அதிகாரி மின் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும்.

*  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, அமைச்சர்கள் நிகழ்வு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும்

*  துணை மின் நிலையங்களில் போதிய பணியாளர்கள் இருப்பதையும், அவசர கால மின்தடையை சரி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதையும் உதவி பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயற்பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்/

*  பணிக்கான அட்டவணையை தயார் செய்து காட்டாயம் அதை பின்பற்ற வேண்டும். 

*  அனைத்து நாட்களிலும் சென்னைக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!