எழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஒவ்வொரு நாளும் புதிய பிரச்சினைகளை பாஜகவினர் கிளப்புவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 6ஆவது நினைவுதினம் மற்றும் குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர், சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அவரிடம், ஒரே நாடு, ஒரே தேர்தலை கலைஞர் ஆதரித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “கலைஞர் எந்த நேரத்தில் ஆதரித்தார்? எடப்பாடி பழனிசாமி முதலில் எதிர்த்தார். அதற்கு என்ன சொல்வது? பேட்டி கூட கொடுக்காமல், வெறும் கடிதம் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்தார். ஒரே தேர்தலை கொண்டு வந்து என்ன சாதிக்கப் போகிறார்கள்? இதில் நிறைய கேள்விகள் உள்ளன. ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஒவ்வொரு நாளும் புதிய பிரச்சினைகளை பாஜகவினர் கிளப்புகின்றனர்.” என்றார்.
உதயநிதி தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியார்: அண்ணாமலை பகீர்!
சனாதனம் சர்ச்சை குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “கொள்கைக்காக உருவாக்கப்பட்டது தான் திமுக. ஆட்சி அதற்கு அடுத்தது தான். அதைவிட முக்கியம் சமூக நீதி எனவே அது தொடர்பாக தொடர்ந்து பேசுவேன். இதனை பல ஆண்டுகளாக பேசி வருகிறோம். அண்ணல் அம்பேத்கர், பெரியார், கலைஞர், நமது எழுச்சித்தமிழர் அண்ணன் திருமாவளவன், அண்ணன் ஆ.ராசா அவர்கள் பேசாததையா நான் பேசி விட்டேன்.?” என கேள்வி எழுப்பினார்.
ஏழரை லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது. 2024 தேர்தலில் பாசிச பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.