கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்து உதயநிதி மீண்டும் கலாய்!

Published : Sep 11, 2023, 12:35 PM IST
கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்து உதயநிதி மீண்டும் கலாய்!

சுருக்கம்

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்துள்ளார்

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும் அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு தேசிய அளவில் விவாதங்களை கிளப்பி உள்ளது. அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று வரை சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும், பல்வேறு மாநிலங்களில் அவரது உருவ படம் எரிப்பு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், சனாதனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநிதிக்கு ஆதரவான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

இதனிடையே, தான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின்ம், தனது பேச்சுக்கும் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன், தனக்கு எதிரான கருத்துக்களை உதயநிதி ஸ்டாலின் லெப்ட் ஹேண்டில் டீல் செய்து வருகிறார். ஹிந்தியில் யாராவது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டால், ஹிந்தி தெரியாது போடா என ஸ்மைலியுடன் பதிலளிக்கிறார்.

இம்புட்டு பணிவா? வைரலாகும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புகைப்படம்!

அந்த வகையில், தற்போது கொசுவர்த்தி சுருள் படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். வேறு எந்த கருத்தையும் அவர் அதில் தெரிவிக்கவில்லை. சனாதனத்தை டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களுடன் ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், தற்போது கொசுவை ஒழிக்க பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்துள்ளார்.

 

 

முன்னதாக, உதயநிதியின் தலைக்கு விலை பேசிய உத்திரபிரதேசத்தை சேர்ந்த ராமசந்திர தாஸ் பரமஹன்ஸ் ஆச்சார்யா என்பவரையும் தனது தாத்தா கலைஞர் கருணாநிதி போன்று உதயநிதி ஸ்டாலின் டீல் செய்தார். முன்பு ஒரு முறை வட மாநில சாமியார் ஒருவர் கலைஞர் கருணாநிதியின் தலையை சீவப்போவதாக சொன்னார். அதற்கு நானே எனது தலையை சீவி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என நக்கலாக பதிலளித்தார் கலைஞர் கருணாநிதி. அதேபோல், எனது தலையை 10 ரூபாய் சீப்பு இருந்தா நானே சீவிக்க போறேன் என்று பரமஹன்ஸ் ஆச்சார்யாவை உதயநிதி ஸ்டாலின் டீல் செய்தார். மேலும், இதுபோன்ற மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அடுத்த 3 மணிநேரம் உஷார்! டெல்டாவில் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை! வானிலை மையம் அலர்ட்!
மதுரை விழிப்புடன் இருக்கும் மண்.. கோயில் நகரம் தொழில் நகராகவும் மாறணும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!