
சட்டமன்ற கூட்டத்தொடருக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் பேச்சைக் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், "சட்டமன்றத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்பாக நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய்யால் நேரடியாகப் பதில் அளிக்க முடியவில்லை. முதல் 11 நிமிடங்கள் காவல்துறை பற்றிப் பேசியவர், அதன்பின் திமுக மீது எவ்வித ஆதாரமும் இல்லாத பொய் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி விவாதத்தைத் திசைதிருப்பி விட்டார். முதலமைச்சர் ஆளும் அரசின் தவறுகளை மறைக்கவே இதுபோன்ற திசைதிருப்பும் அரசியலைச் செய்கிறார். எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன்வைத்தால் அதற்குத் தகுந்த ஆதாரத்தைக் காட்ட வேண்டும். அடுத்த முறை சட்டமன்றத்திற்கு வரும்போது நன்றாகத் தயாராகி வர வேண்டும்," என முதலமைச்சர் விஜய்யை விமர்சித்துப் பேசினார்.