பொம்மன் - பெல்லியை பெருமைப்படுத்தவே ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிக்கான இலச்சினைக்கு பொம்மன் பெயர் வைத்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் 7ஆவது ஆசிய ஆடவர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் வருகிற 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் இந்த போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டியினைச் சிறப்பாக நடத்துகின்ற வகையில் ரூ.16 கோடியில் சென்னை எழும்பூர், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம், ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.
மகளிர் உரிமை தொகை.. விண்ணப்பிக்க தவறி விட்டீர்களா.. அப்படினா இதோ சிறப்பு முகாம்..!
ஆசிய ஆடவர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிகளுக்கான கோப்பை மற்றும் இலச்சினையை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்த மாதம் 20 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் அறிமுகம் செய்தார். அந்த இலச்சினைக்கு ‘பொம்மன்’ என பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொம்மன் - பெல்லியை பெருமைப்படுத்தவே ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிக்கான இலச்சினைக்கு பொம்மன் பெயர் வைத்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஹாக்கி போட்டியை பொம்மன் - பெல்லி தம்பதியினர் நேரில் கண்டு ரசித்தனர். அப்போது அவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகளை தத்தெடுத்து பராமரித்து வரும் பொம்மன் - பெல்லி தம்பதியினரை பெருமைப்படுத்தும் விதமாக ஹாக்கி போட்டிக்கான இலச்சினைக்கு "பொம்மன்" என பெயர் சூட்டினோம்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான… pic.twitter.com/QS2crxt1AX
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதுமலை புலிகள் காப்பகத்தில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகளை தத்தெடுத்து பராமரித்து வரும் பொம்மன் - பெல்லி தம்பதியினரை பெருமைப்படுத்தும் விதமாக #AsianChampionshipTrophyChennai ஹாக்கி போட்டிக்கான இலச்சினைக்கு "பொம்மன்" என பெயர் சூட்டினோம்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியை காண, மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்திற்கு வந்திருந்த பொம்மன் - பெல்லி தம்பதியினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர்களின் தன்னலமற்ற பணிகள் தொடர வாழ்த்தி மகிழ்ந்தோம்.” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது. இந்த படத்தில் முக்கிய கேரடக்டரில் பொம்மன் - பெல்லி தம்பதியினர் நடத்திருந்தனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காடு உள்ளது. இங்கு, பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன்- பெல்லி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.