கொடநாடு கொலை வழக்கு..! செல்போன் பதிவுகள் கண்டறிய டிராய் ஒத்துழைப்பு அளிக்கவில்லை- தமிழக அரசு புகார்

By Ajmal KhanFirst Published Aug 26, 2022, 12:08 PM IST
Highlights

கொடநாடு கொலை வழக்கில் இன்று விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் செல்போன் பதிவுகள், தகவல் பரிமாற்றங்களை சேகரிக்க டிராய் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என அரசு தரப்பு தெரிவித்துள்ளது 

கொடநாடு வழக்கு- ஒத்திவைப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான  நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பங்களாவில் நடைபெற்ற இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதனையடுத்து கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக  நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரித்து கேரளாவை சேர்ந்த சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.இந்த வழக்கு தொடர்பாக கொடநாடு மேலாளர் நடராஜன்,  ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அதிமுக பிரமுகர் சஜீவன் என  பலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

டிராய் ஒத்துழைப்பு வழங்கவில்லை 

எனவே இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று உதகை  மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது அப்போது, இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் சயான், வாளையார் மனோஜ், உதயன், ஜித்தன் ஜெய், ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கொடநாடு வழக்கில் கனகராஜ் செல்போன் பதிவுகள், தகவல் பரிமாற்றங்களை சேகரிக்க டிராய் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டது மேலும், டிராயின் அனுமதி கேட்ட நிலையில் ஒத்துழைப்பு அளிக்கப்படாமல் உள்ளதாகவும் கூறப்பட்டது.கோடநாடு கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 303 பேரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இதையும் படியுங்கள்

சிறையை காட்டி அச்சப்படுத்த முடியாது..! இனி தான் ஆட்டத்தை பார்க்கப்போறீங்க...! ஸ்டாலினை எச்சரிக்கும் பாஜக

 

click me!