உதய் திட்டத்தால் மின் கட்டணம் கடுமையாக உயரும்..!! இலவச மின்சாரம் ரத்தாகும்... அதிர்ச்சி தகவல்…!!

First Published Jan 11, 2017, 11:52 AM IST
Highlights


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த உதய் மின் திட்டத்தில் தமிழ்நாடு இணைந்துள்ளதால் மின் கட்டணம் கடுமையாக உயரும் என்றும், தற்போது ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் உதய் மின் திட்டத்தில் இதுவரை 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. இத்திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தீவிரமாக முயற்சி மேற்கொண்டார்.

ஆனால் இத்திட்டத்தினால் மாநிலங்களுக்கு சாதகங்களை விட பாதகங்களே அதிகம் என்பதால் உதய் திட்டத்தில் தமிழகம் இணையாது என ஜெயலலிதா திட்டவட்டமாக மறுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ஜெயலலிதா காலமானதையடுத்து, ஓபிஎஸ் தலைமையிலான அரசு தமிழகத்தில் பதவி ஏற்றுக் கொண்டதையடுத்து  ஜெயலலிதா எதிர்த்த உணவு பாதுகாப்பு சட்டம், உதய் மின் திட்டம் போன்றவற்றில் இணைய ஒப்புக்கொண்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் உதய் மின் திட்டத்தில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து தமிழகம் 21 ஆவது மாநிலமாக இணைந்தது. ஆனால் இத்திட்டம் மிகவும் மாநிலங்களுக்கு ஆபத்தானது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்திட்டத்தால்தமிழகத்திற்கு அதிக நிதிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், தமிழக மக்கள் அதிகம் பாதிக்கப்படும் என தெரிகிறது.

கச்சா எண்னெயின் விலை உயர்வுக்கு ஏற்ப பெட்ரோல்,டீசல் விலைகளை உயர்த்த எண்னெய் நிறுவனங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ இதைப் போல உதய் மின் திட்டம் செயல்படுத்தப்பட்டால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைக்கும் கட்டணம் பொது மக்களிடம் வசூலிக்கப்படும்.

இதனால் மின் கட்டணம் மிகக் கடுமையாக உயரும் என்றும் தற்போது ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குள்  சில தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொது மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதாலேயே உதய் மின் திட்டத்தை ஜெயலலிதா கடுயைக எதிர்த்து வந்தார். தற்போது அவர் இல்லாத நிலையில் தமிழக பொது மக்கள்  என்ன பாடுபடப் போகிறார்களோ என்ற கவலை எழுந்துள்ளது. 

click me!