தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரிகள் பலி; காவல்துறை விசாரணை

By Dinesh TG  |  First Published Oct 1, 2022, 6:46 PM IST

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் உள்ள தாமிரபரணி அணைக்கட்டுப் பகுதியில் தாயுடன் குளிக்கச் சென்ற தண்ணீர் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் இருவருக்கும் தேவி என்ற 4 வயது பெண் குழந்தையும், நிரஞ்சனா என்ற 7 மாத பெண்குழந்தையும் உள்ளனர். கடந்த சில நாட்களாக நெல்லை டவுனில் உள்ள தாய் வீட்டில் மாரியம்மாள் இருந்து உள்ளார்.நேற்று இரவு தான் சுத்தமல்லி பெரியார் நகரில் உள்ள கணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மூத்த மகள்  ஆற்றிற்கு குளிக்க செல்ல வேண்டும் என கூறியதால் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சுத்தமல்லி அணைக்கட்டு பகுதிக்கு அவர் ஆட்டோவில்  சென்றதாக கூறப்படுகிறது.

குளித்துவிட்டு அணைக்கட்டு கரை பகுதியில்  வெளியே நடந்து வந்த போது மூத்த பெண் குழந்தை தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டதாகவும் அதனை காப்பாற்ற கை குழந்தையுடன் ஆற்றில் குதித்து மூத்த குழந்தையை தேடிய நிலையில் கைக்குழந்தையும் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. பாசனத்திற்காக அணைக்கட்டில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால்  தண்ணீரில் மாரியம்மாளும் இழுத்து செல்லப்பட்ட நிலையில்  ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்த மாரியம்மாளை மீட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

‘60 % கமிஷன் வந்தே ஆகணும் !’ ஊராட்சி தலைவர்களிடம் கமிஷன் கேட்ட ஆம்பூர் திமுக MLA - வைரல் வீடியோ

மேலும் அவரது 7 மாத பெண் குழந்தையை அங்கு குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் மீட்டனர். இது குறித்து காவல்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் தாயை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

தண்ணீரில் விழுந்து இறந்த  7 மாத  குழந்தையின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் விழுந்த மூத்த பெண்குழந்தையை தேடும் பணியை மிதவைகள் உதவியுடன்  துவக்கினார் குழந்தை விழுந்த இடத்திலிருந்து சுமார் 200 அடி தொலைவில்  புதரில்  சிக்கியிருந்த  குழந்தையையும் மீட்டனர். 108 ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் நாடி துடிப்பு குறைவாக இருப்பதாக தெரிவித்த நிலையில் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை - குடிமகன்கள் வருத்தம்

இரண்டு பெண் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட தாய் மாரியம்மாள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்து வருவதால்  காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!