
மண்ணடியில் குட்காவை பதுக்கி விறபனை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மண்ணடி லிங்கி செட்டி தெருவில் ஜோதி ஸ்டோர் என்ற கடை இயங்கி வருகிறது. இங்கு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள பான், குட்கா போன்ற போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தகவலறிந்த போலீசார் அப்பகுதிக்கு விரைந்து ஜோதி ஸ்டோரில் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து தடை செய்யபட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்த சந்திரசேகர், சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.