கோவில் உண்டியலை திருடியதாக நினைத்து இளைஞரை அடித்துக் கொன்ற இருவருக்கு வலைவீச்சு..

 
Published : Jan 04, 2018, 08:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
கோவில் உண்டியலை திருடியதாக நினைத்து இளைஞரை அடித்துக் கொன்ற இருவருக்கு வலைவீச்சு..

சுருக்கம்

vTwo people killed youth by beat

கடலூர்

கடலூரில் கோவில் உண்டியலை திருடியதாக நினைத்து இளைஞரை, அடித்துக் கொன்ற இருவரை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சிறுவரப்பூரில் ஓம் சக்திகோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை நேற்று முன்தினம் இரவு மர்ம மனிதர்கள் திருடிக்கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதனிடையே சத்தம் கேட்டு, அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்கு வந்தபோது, அங்கு உண்டியல் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போத, அதே பகுதியை சேர்ந்த கமல் என்கிற கமல்ராஜ் (27) என்பவர்தான் உண்டியலை திருடியிருக்கலாம் என்று அந்தப் பகுதியை சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

அதனால் சௌந்தர்ராஜன் (30), திருநாவுக்கரசு (50) ஆகிய இருவரும் கமல்ராஜியின் வீட்டுக்குச் சென்று, இதுபற்றி அவரிடம் கேட்டனர்.

அப்போது கமல்ராஜிக்கும், சௌந்தர்ராஜனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் கமல்ராஜை, சௌந்தர்ராஜன் பலமாக தாக்கியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்த நிலையில், கமல்ராஜ் திடீரென வீட்டில் மயங்கி விழுந்ததால் உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு கமல்ராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது உடல் உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் காவலாளர்கள் கொலை வழக்காக பதிவு செய்து சௌந்தர்ராஜன், திருநாவுக்கரசு ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

PREV
click me!

Recommended Stories

என்ன ஒரு தைரியம்! கடலுக்குள்ள 20 அடி ஆழத்துல பரதநாட்டியம் ஆடிய புதுச்சேரி சுட்டி!
காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு