சாராயக் கடைகளை பாதுகாக்க போலீஸ் ஐ.ஜி. தலைமையில் தனிப்பிரிவு வேண்டுமாம் - டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தல்...

 
Published : Jan 04, 2018, 08:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
சாராயக் கடைகளை பாதுகாக்க போலீஸ் ஐ.ஜி. தலைமையில் தனிப்பிரிவு வேண்டுமாம்   - டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தல்...

சுருக்கம்

Police protect for liquor shops - Taskmac workers Emphasize ...

கோயம்புத்தூர்

டாஸ்மாக் பணியாளர்கள், கடைகள் மற்றும் விற்பனை பணத்தை பாதுகாக்க போலீஸ் ஐ.ஜி. தலைமையில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்று கோயம்புத்தூர்  மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

கோயம்புத்தூர் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கந்தவடிவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "டாஸ்மாக் பணியாளர்கள், கடைகள் மற்றும் விற்பனை பணத்தை பாதுகாக்க காவல் ஐ.ஜி. தலைமையில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களை உடனடியாக கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும், டாஸ்மாக் கடைகளை திருட்டில் இருந்து பாதுகாக்க இரவு நேர பாதுகாவலரை நியமனம் செய்ய வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்டப் பொருளாளர் நாராயணன் நன்றித் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!