செம்பரம்பக்கம் ஏரியில் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுத்த போது விபரீதம்.. நீரில் முழ்கி இருவர் பலி

By Thanalakshmi VFirst Published Sep 19, 2022, 1:29 PM IST
Highlights

செம்பரம்பாக்கம் ஏரியில் செல்ஃபி எடுத்த போது தவறி விழுந்து நீரில் முழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

குன்றத்தூர்‌ அடுத்த தரப்பாக்கம்‌ பகுதியை சேர்ந்த 20 வயதாகும் விக்னேஷ் என்பவர் கார்‌ மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரிச்சர்ட்ஸ்‌, 12ம்‌ வகுப்பு படித்து வருகிறார். நண்பர்களான இவர்கள், இன்று இரு சக்கர வாகனத்தில் செம்பரம்பாக்கம்‌ ஏரியை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளனர். 

செம்பரம்பாக்கம்‌ ஏரியை சுற்றி பார்த்து விட்டு, அங்கிருந்து மதகின்‌ அருகே நீரில் இறங்கி நின்று தங்களது செல்போனில்‌ செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அதிவேகமாக வந்த நீரில் தடுமாறி  விழுந்து முழ்கினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்க முயன்றனர்‌. ஆனால் தண்ணீர் வெகு அடித்து செல்லபட்டதால், இருவரையும்‌ மீட்க முடியவில்லை. 

மேலும் படிக்க:குழந்தைகளின் உடல் நலனில் விளையாட வேண்டாம்...! உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அறிவியுங்கள் - ராமதாஸ்

பின்னர் தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியின் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பின்‌ நீரில்‌ மூழ்கிய இருவரின்‌ உடல்களும் சடலமாக மீட்கப்பட்டது. இதையடுத்து குன்றத்தூர்‌ காவல்‌ துறையினர்‌ பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பி வைத்தனர்.

செம்பரம்பாக்கம்‌ ஏரியில்‌ குளிக்கும்‌ போதும்‌, செல்ஃபி எடுக்கும்‌ போதும்‌ விழுந்து உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி மாணவன்‌ குளிக்கும்போது
நீரில்‌ மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:தமிழகத்தில் அதிகரிக்கும் தீண்டாமை கொடுமை...! திமுக அரசின் மெத்தன போக்கே காரணம்- ஓபிஎஸ் ஆவேசம்

click me!