சென்னையில் கன மழை..! தேங்கி கிடக்கும் தண்ணீர்..! இரண்டு பேர் பலியான பரிதாபம்

Published : Nov 01, 2022, 12:28 PM IST
சென்னையில் கன மழை..! தேங்கி கிடக்கும் தண்ணீர்..! இரண்டு பேர் பலியான  பரிதாபம்

சுருக்கம்

சென்னையில் பெய்து வரும் கன மழையால் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவரும், மின்சாரம் தாக்கி ஆட்டோ ஓட்டுநரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக லேசாக பெய்து வந்த மழையானது நேற்று மாலை தீவிரம் அடைந்தது. இரவு முழுவதும் தொடர்ந்த மழை விடாமல் பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள நீரை அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் சென்னை வியாசர்பாடியில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் தேங்கி இருந்த மழைநீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை வியாசர்பாடி சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான தேவேந்திரன்  என்பவர் வியாசர்பாடி பி வி காலனி 18 வது தெருவில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். 

நகரத்திற்குள் நகரும் மேகம்.. வீட்டிலே இருங்க! சாலை பயணத்தை தவிர்க்கவும்.. அலர்ட் செய்யும் பிரதீப் ஜான்..!

அப்போது அந்தப் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் மின்சார வயர் அறுந்து விழுந்து கிடந்துள்ளது.  இதை அறியாமல் மிதித்த தேவேந்திரன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இத்த தொடர்பாக வியாசர்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் உயிரிழந்த தேவேந்திரன் உடலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார வயரில் மின்சாரத் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போல  புளியந்தோப்பை சேர்ந்த சாந்தி என்ற பெண் தனது வீட்டு  பால்கனியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது மழையின் காரணமாக ஈரத்தில் ஊறிய சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய சாந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்

இனி தமிழிலும் எம்பிபிஎஸ் படிப்பு படிக்கலாம்..! சர்வதேச தரத்திற்கு உதவுமா..? குழப்பத்தில் மாணவர்கள்

PREV
click me!

Recommended Stories

அந்த வார்த்தையை சொல்ல உங்களுக்கு தகுதியே இல்லை ஸ்டாலின்.. திமுகவை விடாமல் இறங்கி அடிக்கும் அன்புமணி!
Tamil News Live today 17 January 2026: BigBoss - கவின் கொடுத்த 'மாஸ்' அப்டேட்.! சாண்டியுடன் இணையும் புதிய படம்.. பிக் பாஸ் வீட்டில் பொங்கிய சினிமா பொங்கல்!