இனி தமிழிலும் எம்பிபிஎஸ் படிப்பு படிக்கலாம்..! சர்வதேச தரத்திற்கு உதவுமா..? குழப்பத்தில் மாணவர்கள்

By Ajmal KhanFirst Published Nov 1, 2022, 11:39 AM IST
Highlights

எம்பிபிஎஸ் பாடங்களை தமிழில் படிப்பதற்கான பாட புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில்  தமிழில் பாடங்களை படித்தாலும் ஆங்கிலத்தில் தான் தேர்வெழுத வேண்டும் என மருத்து கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பு

மருத்துவப்படிப்பான எம்.பி.பி.எஸ் படிப்பு, மொத்தம் 5 அரை ஆண்டுகள் படிப்பாகும், நான்கரை ஆண்டு பாடப்படிப்பும், ஓராண்டு பயிற்சியுமென மொத்தம் ஐந்தரை ஆண்டுகள் ஆகும். இந்த பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிராமப்புரங்களில் இருந்து வரும் மாணவர்கள் உடனடியாக ஆங்கிலத்தில் பாடங்களை கவனிப்பது சற்று சிரமமான நிலை இருந்தது. இதனை களையும் வகையில் மத்தியப் பிரதேசத்தின் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய மூன்று எம்பிபிஎஸ் பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்பட உள்ளது. இதற்கான மொழிபெயர்ப்பு புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் வெளியிட்டார். 

LPG Cylinder Price: வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு.. எவ்வளவு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!

தமிழில் மொழிபெயர்ப்பு

இதே போல தமிழிலும் எம்பிபிஎஸ் படிப்பு படிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கான பணிகளை  தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்விச்சேவைகள் கழகம் ஆகியன இணைந்து, 25 மருத்துவப் பாடப்புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் பணிகளைத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 30 பேராசிரியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இந்தாண்டு மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள், முதல்முறையாக எம்.பி.பி.எஸ். பாடப் புத்தகங்களைத் தமிழில் பெறவுள்ளனர். இதற்கென 4 பாடப்புத்தகங்கள், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அடுத்த மாதத்திற்குள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி

முதல்கட்டமாக மாணவர்களுக்கான ‘கிரேஸ் அனாடமி கைட்டன்’,‘ஹால் டெக்ஸ்ட் புக் ஆஃப் மெடிக்கல் பிசியாலஜி’ உள்ளிட்ட 4 புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு காரணமாக மருத்துவப் படிப்பில் சேரும்  மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் 565 மாணவர்கள்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். எனவே எம்பிபிஎஸ் படிப்பு தமிழில் மொழி பெயர்க்கப்படுவது மாணவர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழில் பாடங்களை படித்தாலும் ஆங்கிலத்தில் தான் தேர்வெழுத வேண்டும் என மருத்து கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

புதிய ஆராய்ச்சிக்கு உதவுமா.?

மேலும் சர்வதேச அளவில் தேர்வு எழுத மாணவர்கள் சென்றால் இந்தப் படிப்பு உதவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் புதிய ஆய்வுகள் தொடர்பாக படிக்க வேண்டிய நிலை இருக்கும். மேல் படிப்பு படிக்க வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்ள வேண்டியது இருக்கும் எனவே ஒவ்வொரு மொழியிலும் மருத்துவ பாடம் கற்பிக்கப்படுவது எந்த வகையில் பலன் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்
நகரத்திற்குள் நகரும் மேகம்.. வீட்டிலே இருங்க! சாலை பயணத்தை தவிர்க்கவும்.. அலர்ட் செய்யும் பிரதீப் ஜான்..!

click me!