திருட்டுத்தனமாக மணல் அள்ளிவந்த இரண்டு லாரிகள் பறிமுதல்; தலா ரூ.25 ஆயிரம் அபராதம்...

 
Published : Dec 08, 2017, 09:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
திருட்டுத்தனமாக மணல் அள்ளிவந்த இரண்டு லாரிகள் பறிமுதல்; தலா ரூ.25 ஆயிரம் அபராதம்...

சுருக்கம்

Two lorries seized in stealth sand Rs 25 thousand fine

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்த இரண்டு லாரிகளை கையும் களவுமாக பிடித்த வருவாய்த்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அவற்றுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பெரியம்மாபட்டி பகுதிகளில் திருட்டுத்தனமாக லாரிகளில் மணல் அள்ளி செல்கின்றனர் என்று வட்டாட்சியருக்கு புகாரை வந்தது.

அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று அந்தப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.  

அப்போது, அந்தவழியாக டிப்பர் லாரி மற்றும் மினி லாரிகளில் மணல் ஏற்றி வந்தன. அந்த வாகன ஓட்டுநர்களிடம் மணல் அள்ளுவதற்கான அனுமதிச் சீட்டை கேட்டனர் வருவாய்த்துறை அலுவலர்கள்.

அப்போது அவர்களிடம் அனுமதி இல்லாதது தெரியவந்தது.  இதனையடுத்து திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்ததால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.  அவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து இதுபோன்று திருட்டுத்தனமாக மணல் அள்ளி வருவபர்களை கையும் களவுமாக பிடித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

மோட்டர் போட்டு ரெடியா வச்சுக்கோங்க.. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
குஷியில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.! கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24ம் விடுமுறை!