300 கிலோ கடல் அட்டைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற இருவர் கைது; மதிப்பு ரூ.5 லட்சமாம்…

 
Published : Jul 15, 2017, 07:44 AM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
300 கிலோ கடல் அட்டைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற இருவர் கைது; மதிப்பு ரூ.5 லட்சமாம்…

சுருக்கம்

Two arrested for attempting to kidnap 300 kg of seafaring overseas The value of Rs 5 lakhs ...

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ.5 இலட்சம் மதிப்புள்ள 300 கிலோ கடல் அட்டைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற இருவரை காவலாளர்கள் கைது செய்தும், அவர்கள் வைத்திருந்த கடல் அட்டைகள் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்தும் அதிரடி காட்டினர்.

மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகப் பகுதியில் அரியவகை கடல் அட்டைகள் காணப்படுகின்றன. இந்த கடல் அட்டைகள் தொடர்ந்து அழிந்து கொண்டு வருகின்றன.இதனால் இவற்றைப் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.

ஆனாலும், தொடர்ந்து சிலர் கடல் அட்டைகளை பிடித்து, வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்து கொழுத்த லாபம் பார்த்து வருகின்றனர். இதனால் கடலோர பாதுகாப்பு காவலாளர்கள் மன்னார்வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடலோரப் பாதுகாப்பு காவல் ஆய்வாளர் முகேஷ் ஜெயக்குமார் அறிவுரையின் பேரில் உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், வசந்தகுமார் மற்றும் முருகன் ஆகியோர் தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒரு மினிவேனில் சிலர் கடல் அட்டைகளை கடத்திக் கொண்டு வேகமாக காவலாளர்களை கடந்து சென்றனர். உடனே காவலாளர்கள் அந்த வேனை பின் தொடர்ந்தனர். அந்த வேன் தூத்துக்குடி மடத்தூர் சாலை திரவியரத்தினநகரில் உள்ள ஒரு குடோனுக்குச் சென்றது.

காவலாளர்கள் உள்ளேச் சென்றனர். அங்கு ஏராளமான கடல் அட்டை அவித்து, காய வைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக காவலாளர்கள் அங்கிருந்த தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சேர்ந்த செல்லையா மகன் முருகன் (35), நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பொன்னாக்குடியை சேர்ந்த கோவில்பிச்சை மகன் ரவி (23) ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி கடற்கரையில் இருந்து கடல் அட்டையைச் சேகரித்து, பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக வைத்து இருந்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 300 கிலோ கடல் அட்டை மற்றும் அவர்கள் பயன்படுத்தி வந்த மினிவேனையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 இலட்சம்.

பின்னர் பறிமுதல் செய்த கடல் அட்டை மற்றும் மினி வேனை மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை அதிகாரி சடையாண்டியிடம் ஒப்படைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!