
கிருஷ்ணா நதி நீருக்காக ஆந்திர அரசுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை 600 கோடியை தந்தால்தான் கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப்படும் என அம்மாநில அதிகாரிகள் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஒவ்வொர ஆண்டும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு திறக்க வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. அதற்கு பதிலாக கால்வாய் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான செலவை, ஆந்திர அரசுடன், தமிழக அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தமும் உள்ளது.
. ஆனால் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு முழுமையாக, 12 டி.எம்.சி., நீரை வழங்குவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.. நடப்பு நிதியாண்டுக்கான நீர் வழங்கும் காலம், ஜூலை,1 ம் தேதி தொடங்கியது. ஆனால் கண்டலேறு அணையில், போதிய அளவு தண்ணீர் இலலாததால் ஆந்திர அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை.
அதே நேரத்தில், ஆந்திராவுக்கு வழங்க வேண்டிய, 600 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை தமிழக அரசு வழங்காததால், கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட ஆந்திர அரசு அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.
தற்போது, சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தொடர்ந்து வரும் நிலையில் இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது ?
இது குறித்த தகவல், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் மூலம், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.