த.வெ.க; மாநாட்டுக்கு வரும் வழியில் இறந்த தொண்டர்கள் - எதிர்ப்புக்கு பின் வந்த விஜயின் இரங்கல்!

Ansgar R |  
Published : Oct 28, 2024, 08:39 PM IST
த.வெ.க; மாநாட்டுக்கு வரும் வழியில் இறந்த தொண்டர்கள் - எதிர்ப்புக்கு பின் வந்த விஜயின் இரங்கல்!

சுருக்கம்

TVK Maanadu : நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டிற்கு நான்கு சக்கர வாகனத்தில் வந்த அக்கட்சி தொண்டர்கள் சிலர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தளபதி விஜயின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தளபதி விஜய் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகவே அவருடைய அரசியல் வருகை பெயர் அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று பல லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் தளபதி விஜய். இந்த மாநாட்டில் பல பரபரப்பு விஷயங்களை அவர் பேசியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆளுநர் தேவையா? இல்லையா? என்கின்ற விஷயம். பாஜக மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளுக்கு எதிரான நேரடியான சவால் உள்ளிட்டவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்க அக்கட்சியை தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விக்கிரவாண்டிக்கு வந்து சென்றனர். இதில் வி. சாலை நோக்கி வரும்போது நடைபெற்ற ஒரு சாலை விபத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் கழக தோழர்கள் சீனிவாசன், விஜய்கலை, வசந்தகுமார், ரியாஸ், உதயகுமார் மற்றும் சார்லஸ் ஆகியோர் மரணம் அடைந்தனர். இது மிகப் பெரிய துயரச் செய்தியாக தமிழகத்தையே உலுக்கியது. ஆனால் இவர்களுடைய மறைவுக்கு மாநாடு நடந்து முடிந்து 24 மணி நேரம் ஆகியும் தளபதி விஜய்யிடம் இருந்து எந்த விதமான இரங்கல் செய்தியும் வராமல் இருந்தது. 

"உன்னால் மட்டுமே முடியும்"; விஜய் கொடுத்த ஊக்கம் - தரமான த.வெ.க கொள்கை பாடலை எழுதியது யார் தெரியுமா?

இதுகுறித்து அக்கட்சியின் தொண்டர் ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொழுது, அவர்கள் இறந்து 24 மணி நேரம் ஆகியும், தலைமை இடத்திலிருந்து எந்த விதமான ஆறுதல் செய்தியும் வரவில்லை. ஒரு குறுஞ்செய்தி கூட எங்களுக்கு வருத்தத்தோடு அனுப்பப்படவில்லை. நாங்கள் இழப்பீடு எதுவும் கேட்கவில்லை, நேரில் வந்து அவர்களுடைய இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்கவில்லை. ஆறுதலாக ஒரு வரி கூறினால் என்ன என்று பகிரங்கமாக பல குற்றச்சாட்டுகளை முன்  வைத்துள்ளார். மேலும் கட்சிக்காக உழைத்ததற்கு இது தான் பதிலா என்றும் கேள்வி எழுப்பினார். இந்த சூழலில் தற்பொழுது 8:00 மணி அளவில் தளபதி விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். 

அந்த அறிக்கையில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்க வந்த கழகத் தோழர்கள் வழக்கறிஞர் திரு. கில்லி சீனிவாசன், திரு ஜே.கே விஜய்கலை, திரு வசந்தகுமார், திரு ரியாஸ், திரு உதயகுமார் மற்றும் சிகிச்சை பலனின்றி இறந்த திரு சார்லஸ் ஆகிய அனைவரின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது என்றும், அவர்கள் கழகத்துக்காக ஆற்றிய பணிகள் என்றும் நிலைத்து நிற்கும் என்றும் கூறியிருக்கிறார். 

தலைவர் மாடுலேஷனில் மாநாட்டை தெறிக்க விட்ட தளபதி! விஜய்க்கு இருந்த தைரியம் ஏன் ரஜினிக்கு இல்லை?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?