
Thalapathy Vijay Speech at TVK Maanadu: தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தற்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள வி சாலையில் நடைபெற்று வருகிறது. இதில், விஜய் கலந்து கொண்டு 100 அடி உயரமுள்ள கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடல் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சியின் கொள்கையும், செயல் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தளபதி விஜய் தனது அப்பா மற்றும் அம்மாவிட ஆசி பெற்று முதல் அரசியல் உரையை தொடங்கினார். அம்மாவிடம் தனது உணர்வை சொல்ல தெரியாத குழந்தை முன் பாம்பு வந்து நின்னா என்ன செய்யும், பயமே தெரியாத அந்த குழந்தை பாசத்தோடு பாம்பை பிடித்து விளையாடும், அது போல பாம்பு என்பது அரசியல், அந்த குழந்தை உங்கள் நான் என்று தனது பேச்சை தொடங்கினார்.
சும்மா எதார்த்தமாகவும், ஜாலியாகவும் பேசிய தளபதி விஜய் கவனமாக களம் ஆட வேண்டும். இது சினிமா அல்ல அரசியல். ஆடியோ லாஞ்ச்ல பேசுறது மாதிரி எல்லாம் கிடையாது. இது அரசியல் மேடை. சொல்ல வேண்டிய விஷயத்தை தெளிவாக சொல்லிடணும். பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் தான் கொள்கை வழிகாட்டும் தலைவர்கள் என்று குறிப்பிட்டு பேசினார்.
பெண்களை கொள்கை தலைவர்களாக ஏற்று களத்திற்கு வரும் முதல் அரசியல் கட்சி நம் தமிழக வெற்றிக் கழகம் தான் என்றார். இவர்களை நாம் மனதரா பின்பற்றுவதே மதச்சார்பின்மைக்கும், சமுதாய நல்லினத்திற்குமான மிகப்பெரிய சான்று. நம்மை பார்த்து யாரும் விசில் அடிச்சான் குஞ்சு என்று சொல்லிடக் கூடாது.
கொள்கை கோட்பாடுகளையும் வழிகாட்டி தலைவர்களையும் மனதில் நிறுத்தி இவர்கள் வேகமானவர்கள் விவேகமானவர்கள் என்று சொல்ல வைக்க வேண்டும். சொல்லை விட செயல் தான் முக்கியம். சமரசத்திற்கும், சண்டை நிறுத்தத்திற்கும் இடமில்லை. வெறுப்பு அரசியல் தேவையில்லை. எதை நினைத்து அரசியலுக்கு வந்தோமோ அதை நோக்கி முன்னேறி செல்வோம்.
எதைப் பற்றியும் யோசிக்கவே கூடாது. ஆனால், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். அரசியலில் நாம் என்ன ஸ்டாண்ட் எடுக்க போகிறோம் என்பது தான் முக்கியம். அது தான் நம்ம எதிரி யார் என்று சொல்லும். இல்ல அவர்களே நம் முன் வந்து எதிர்க்க ஆரம்பிப்பார்கள்.
களத்தில் வெற்றியை தீர்மானிப்பதே எதிரிகள் தானே. கட்சியை ஆரம்பித்த போதே அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளின் உயிர் நாதத்தை நம் அடிப்படை கோட்பாடு கொள்கையாக அறிவித்த போதே நம்முடைய உண்மையான எதிரிகள் யார் என்று தெரிந்துவிட்டது. பிறப்பை வைத்து ஏற்றத்தாழ்வுகள் இல்லவே இல்லை, கூடவே கூடாது என்று சமதர்ம சமத்துவ கொள்கையை கையில் எடுத்த போதே கொஞ்சம் கதறல் சத்தம் கேட்டது.
இதோ இப்போ மாநாட்டில் ஓபனாகவே சொல்லியாச்சு. இனி கதறல் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். இயல்பான அடிப்படை கொள்கை கோட்பாட்டுக்கு எதிராக இருக்குற மாதிரி மக்களை மதம், சாதி, மதம், இனம், ஏழை, பணக்காரன் என்று பிரித்து ஆளும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் மட்டும் நம் அரசியல் எதிரியா? என்று விஜய் கேள்வி எழுப்பினார். இதன் மூலமாக விஜய் யாரை எதிரியாக கருதுகிறார் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது.