
Vijay at Chennai Iftar: Unity in Diversity, Thalapathy Vijay joins the Iftar Celebrations : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் சென்னையை சுற்றிலும் உள்ள 15க்கும் அதிகமான ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, நோன்பு கஞ்சி ஆகியவை தயாராக இருந்தது. ரமலானை முன்னிட்டு இன்று விஜய் நோன்பிருந்த நிலையில் தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் வெள்ளை சட்டையுடன், வெள்ளை நிற வேஷ்டியும், தலையில் தொப்பியும் அணிந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோன்பு திறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு விஜய்யின் மதச்சார்பற்ற தலைமையை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிற. சிலர், தனக்கு தானே பப்ளிசிட்டி தேடிக் கொள்கிறார் என்றூ விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இவரே இஃப்தார் நிகழ்ச்சியை நடத்துவாராம், இவரே நிகழ்ச்சியில் கலந்து கொள்வாராம் என்று சோஷியல் மீடியாவில் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் கூட விஜய்யின் வருகை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரசிகர்களும் ஆதரவாளர்களும் அவரை தமிழ்நாட்டின் மிகவும் மதச்சார்பற்ற தலைவர் என்று வர்ணித்தனர்.