
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கருணாநிதியால் முரட்டு பக்தன் என்று செல்லமாக அழைக்கப்பட்டவருமான எம்.பெரியாசாமி உடல் நலக்குறைவால் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 79.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடத்தைச் சேர்ந்த பெரியசாமி, கடந்த 30 ஆண்டுகளாக திமுக மாவடட செயலளாராக இருந்த வந்தார். 1996 ஆம் ஆண்டு தூத்துக்குடி நகராட்சி தலைவராக செயல்பட்டார்.
1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் தூத்துக்குடி தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எமர்ஜென்சியின்போது மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை தண்டனையை அனுபவித்தார். திமுகவின் சோதனையான கட்டங்களில் துணையான நின்றவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.
அவரது மகள் கீதா ஜீவன் தற்போது தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2006 – 2011 திமுக ஆட்சியின்போது கீதா ஜீவன் அமைச்சராக இருந்தார்.
தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக என்.பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட திமுகவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரியசாமி இன்று காலை காலமானார்.