தூத்துக்குடி துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 09:22 AM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
தூத்துக்குடி துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு

சுருக்கம்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று மாலை 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வருமாறு.

வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். இது புயலாகவும் மாற வாய்ப்புள்ளது.

இதனால் கடல் மற்றும் கடலோர பகுதிகளில் கடற்காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். கடலில் ராட்சத அலைகள் தோன்றலாம். இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் மீன்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாரத் மாதா கோஷத்தால் கோபமாகி கத்திய சேகர் பாபு! பரபரப்பு
கொங்குவை தொடர்ந்து 'டெல்டா' பெண்களின் வாக்குகளுக்கு குறி.. திமுகவின் அடுத்த மாஸ்டர் பிளான்!